டி.ஆர்.இ.யு.வின் 100வது ஆண்டு விழா! நாகப்பட்டினத்தில் உற்சாகத்துடன் துவக்கம்! |||| தனியார்மய எதிர்ப்புக் கருத்தரங்கம் : இந்திய ரெயில்வேயில் அதிகரித்து வரும் தனியார்மய தாக்குதல்களைக் கண்டித்தும், சென்னை சென்ட்ரல், கோழிகோடு ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட 407 ரெயில்நிலையங்களில் தனியார்மயம், தண்டவாளம், சிக்னல், கோச், வேகன் பராமரிப்பு என அனைத்தும் தனியார்மயப் படுத்துவதைக் கண்டித்தும் 23-8-2017 அன்று காலை 10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் கருத்தரங்கம் நடைபெறும். தொழிலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
Quick Touch


Latest News
Slide Show

:: Home

 

 

தியாகி பரமசிவம் நூற்றாண்டு!

       Paramasivam (Small)

 

4-5-1937ல் உருவான 'தென்னிந்திய ரெயில்வேத் தொழிலாளர் சங்கத்தின் (SRLU இன்றைய டி.ஆர்.இ.யு.வின் முன்னோடி சங்கம்) நிறுவனத் தலைவர் தியாகி பரமசிவம் வெள்ளையர் ஆட்சியில் 1941 நவம்பர் 6ல் சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்.

 

தூய வெள்ளையில் நான்கு முழ திருப்பூர் கதர் வேட்டி கதர் ஜிப்பா, கதர் குல்லாய் அணிந்து சிங்கம் போல் தலை நிமிர்ந்து மிடுக்குடன் நடந்து செல்வார் பரமசிவம்.

 

பரமசிவம் என்ற அந்தப் பெயரில் நீதியும், உறுதியும், தேசபக்தியும், தன்னம்பிக்கையும் அடங்கியிருப்பதாக தொழிலாளர்கள் உணர்வுப்பூர்வமாக எண்ணினார்கள். 

 

அதே சமயத்தில் பரமசிவம் என்றால் வெள்ளை நிர்வாகிகளுக்கு சிம்ம சொப்பனம்!

 

தேச விடுதலை இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் பிரதான பங்கு வகிப்பதுதான் வலுவான அஸ்திவாரத்தை உண்டாக்கும் என்பதை பரமசிவம் உணர்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து யுத்தத்திற்கு தொழிலாளர்களது ஒத்துழைப்பை மறுத்து அவர் ஆற்றியுள்ள தேசபக்த பணி மகத்தானது.

 

இனியும் அவரை விட்டுவைக்க கூடாதென்ற வெள்ளை ஏகாதிபத்திய அரசசால் 1941 நவம்பர் 6ல் சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Developed by ArcherWebsol Copyright © 2007-17 | DREU * CITU | All Rights Reserved
 
Go Top