ரகசிய வாக்கெடுப்பு தேர்தல்

ரெயில்வே தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்புத் தேர்தலை அனைத்து ஜோனல் ரெயில்வேக்களிலும் கொல்கத்தா மெட்ரோ ரெயில்வேயிலும் 2019 ஆகஸ்ட் மாதம் நடத்துவதென ரெயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. சரியான தேதிகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். பழைய தேர்த விதிமுறைகளை பரிசீலனை செய்து புதியவை குறித்து ஆலோசனைக் கூற ஒரு கமிட்டி உருவாக்கப்படவுள்ளதால் அனைத்து ஜோனல் ரெயில்வேக்களும் இது குறித்துத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டுமென ரெயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது!

டி.ஆர்.இ.யு. - சிஐடியு


-----------------------